ஏசியாநெட்டில் ஒளிபரப்பான “பரஸ்பரம்” என்ற மலையாள சீரியலில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி அருண். அவர் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை எழுதி வருபவர்.
இந்த நிலையில் ரோகன் என்ற ஓர் இளைஞர், காயத்ரி அருணிடம், “ஓர் இரவில் என்னுடன் தங்கினால் 2 லட்சம் தருகிறேன் வருகிறாயா? குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் என்றாலும் எனக்கு ஓகே, இது நம் இருவருக்கும் இடையில் மட்டுமே இருக்கும்” என்று அவரது உள்டப்பியில் போய் கேட்டுள்ளார்.
இதற்கு காயத்ரி அருண் நெற்றியடி பதில் கொடுத்துள்ளார். ” உங்கள் தாய் மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் ” என்று செருப்படி பதில் தந்துள்ளார்.
(Visited 70 times, 1 visits today)
+1