தமிழக பத்திரப்பதிவு துறை அலுவலகம் முழுவதும் இனி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் லைவ் (live camera) கேமரா பொருத்தப்பட்டு , கோட்ட , மாவட்டங்களில் உள்ள தலைமை அதிகாரிகள் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் பத்திரப்பதிவு, திருமண பதிவுகளை கண்காணிக்கும் வகையில் இந்த இன்டெர்நெட் வசதி கொண்ட கேமராக்கள் வரும் பிப்ரவரி 15 முதல் இயக்கப்பட உள்ளன.
இதன் மூலம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடக்கும் ஆள்மாறாட்டம் மற்றும் தவறுகளை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விருப்பப்படுபவர்களுக்கு அவர்களின் பத்திரப்பதிவு நிகழ்ச்சியை டிவிடியில் பதிவேற்றம் செய்து வழங்கும் வகையில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான கட்டண தொகை ரூபாய் ஐம்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவுகள் பத்திரபதிவுகளில் நடக்கும் ஆள்மாறாட்ட குற்றங்களில் நீதிமன்ற ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
தமிழக அரசு நிறுவனமான எல்காட் இந்த கேமரா பொருத்தும் பணியில் பொறுப்பேற்றுள்ளது.