ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் – உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: சென்னை உயர்நீதி மன்றம் இன்னும் 4 வாரத்துக்குள்ளாக இரட்டை இலை குறித்த வழக்கில் முடிவு எடுக்காவிட்டால், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
குக்கர் சின்னம் ஒதுக்கப்படுமா என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் உயர்நீதி மன்றத்தில் , இன்னும் தினகரனின் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ள கட்சி இல்லை என்பதால் அதை இப்போதே சொல்ல முடியாது என்று தெரிவித்து இருந்தது. ஏற்கனவே இரட்டை இல்லை வழக்கும் நிலுவையில் உள்ளதால், குக்கர் சின்னத்தையாவது வழங்க வேண்டும் என்று அமமுக உச்ச நீதிமன்றத்தில் கோரி இருந்தது.
இந்த சூழ்நிலையில் குக்கர் சின்னம் தினகரனுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
(Visited 20 times, 1 visits today)