இந்தியாசெய்திகள்

நர்ஸ் டு டாக்டர் ; கள்ளக்காதல் டு கள்ளக்காதல்; இறுதியில் ஆசிட் டு தற்கொலை முயற்சி

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஒரு மருத்தவமனையில் பணிபுரிந்த  ஆதர்ஷ் என்ற மருத்துவருக்கும் செவிலியர் அருணா குமரிக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

ஆதர்ஷ் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்துக்கு முயற்சி செய்து வருகிறார். அருணா குமரியும்  ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த நிலையில் இருவரும் பணிபுரியும் இடத்தில் கள்ளக் காதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இடையில் அருணா குமரியின் கணவர் இறந்துவிட, அருணா குமரி , ஆதர்ஷை திருமணம் செய்ய வற்புறுத்த ஆரம்பித்துள்ளார். இதனால் அருணா குமரியின் நட்பை முறித்துள்ளார் மருத்துவர் ஆதர்ஷ்.

தனது விவாகாரத்து சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு திருப்பதி கோர்டுக்கு வந்த ஆதர்ஷ் வெளியே வரும் போது, முகத்தில் கறுப்புத் துணியைக் கட்டி இருந்த அருணா குமரி ஆசிட்டை வீசியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக ஆதர்ஷ் மீது முழுவதுமாக படவில்லை. அருகில் இருந்த சிலரின் கைகளில் பட்டு அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் பூச்சி மருந்தைக் குடித்தாரா அல்லாது ஆசிட் குடித்தாரா என்று தெரியவில்லை. தற்கொலை முயற்சி செய்துள்ளார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அந்த வீடியோ கீழே;

(Visited 103 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close