ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை
கொல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இவர் மேற்கு வங்காளத்தில் கிருஷ்ணகஞ் தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சரஸ்வதி பூஜை விழாவில் அவர் கலந்து கொண்ட போது இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது அரசியல் கொலை என்று திரிணமுல் காங்கிரஸ் சொல்கிறது. பாஜக இக்கொலைக்குக் காரணமானவர்களை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோருகிறது. இது திரிணமுல் கட்சியில் உள்ள கருத்து வேறுபாட்டினால் கூட நடந்து இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டுகிறது.
(Visited 16 times, 1 visits today)