இந்தியா 4 ரன்களில் தோல்வி
இன்று இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் இடையேயான மூன்றாவது டி 20 போட்டி ஹாமில்டனில் நடக்கிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தப்போட்டி தொடரை யார் வெல்வார்கள் என்பதால் இந்தப் போட்டி எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.
நியுசிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. நியுசிலாந்து 20ஓவர்களில் 212/4 என்ற ரன்களை குவித்தது. முன்ரோ 72 ரன்களையும், செய்பிர்ட் 43 ரன்களையும் எடுத்தனர். வில்லியம்சன் 27, கிராண்ட் ஹோம் 30 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணியில் குல்திப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், அஹ்மத் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களையே 20 ஓவர்களில் எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 16 ரன்களே வெற்றிக்குத் தேவைப்பட்டது. இரண்டு , மூன்றாவ்து பந்தில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்க முடியாமல் போக இறுதியாக இந்தியா 4 ரன்களில் தோற்றது.
இந்திய அணியில் அதிக பட்சமாக விஜய் ஷங்கர் 43 ரன்களை எடுத்தார். தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்ட்யா இருவரும் முறையே 33. 26 ரன்களை எடுத்தனர்.