2 ஜி வழக்கில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட ‘தி ஹிந்து ‘ – பகுதி 2
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் ஊழலை எவ்வாறு ‘தி ஹிந்து ‘ கைகழுவி காங்கிரசின் ஊதுகுழலாக செயல்பட்ட வரலாறை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.
இந்த கட்டுரையில் அதே என்.ராம் தலைமையிலான தி ஹிந்து கனிமொழி மற்றும் ஆண்டிமுத்து ராஜாவுக்கு ஆதரவாக எப்படி அவர்களை தவறே செய்யாதவர்களாக முன்னிறுத்தி செயல்பட்டது என்பதைக் காணலாம்.
2009 களின் ஆரம்பத்தில் 2 ஜி அலைக்கற்றை தொடர்பான பல தகவல்கள் வெளிவருகின்றன. வெளிப்படையாக நடந்த அப்பட்டமான விதிமீறல்கள் , 2 ஜி அலைக்கற்றை உரிமங்களில் நடந்த பேரங்கள் என்று பல ஆதாரங்கள் பத்திரிக்கைகளில் வெளியே வருகின்றன. பயோனீர் ஆங்கில இதழில் 2 ஜி ஊழல் தொடர்பான பல ஆதாரங்களை பத்திரிக்கயாளர் கோபிகிருஷ்ணன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த நேரம் அது.
திமுக மற்றும் ஆ.ராசா வின் மீது பொதுவெளியிலும் ,அரசு,அரசியல் மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. ஆ.ராசா தனக்கு வேண்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருந்தது .
அதே நேரத்தில் மே மாதம் 22ம் தேதி ‘தி ஹிந்து ‘ ஆங்கில இதழில் ஆ.ராசாவின் பேட்டி வருகிறது. பேட்டியை எடுத்தவர் ஆர்.கே .ராதாகிருஷ்ணன் .இவர் தி ஹிந்து குழும பத்திரிகையான பிரண்ட்லைனில் பணிபுரிந்த காலகட்டம் அது.
ஆர்.கே என்ற இவர் ஸ்ரீலங்கா தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக மட்டுமே எழுதி வந்தவர். ஆனால் திமுக தலைமைக்கு நெருக்கமானவர் என்பதாலேயே ,சம்பந்தமே இல்லாத இவர் ஆ.ராசாவின் பேட்டியை எடுக்க நரமிம்மன் ராமினால் டெல்லிக்கு அனுப்பப்படுகிறார்.
முழுக்க முழுக்க “ஆ.ராசா உத்தமர் , நல்லவர் , அவர் தவறே செய்யவில்லை .அவர் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் சலுகை அளிக்கவில்லை ” என்கிற ரீதியில் ஆ.ராசாவை தாங்கிப் பிடித்து, எந்தவித கடினமான கேள்விகளும் கேட்கப்படாத ஒரு பேட்டி அது . அந்த பேட்டி இன்றும் தி ஹிந்துவின் இணையதளத்தில் படிக்க கிடைக்கிறது.
தொடர்ச்சியாக பல மாதங்கள் 2 ஜி ஊழல் தொடர்பாக சால்ஜாப்பு கட்டுரைகளும், ஆ.ராஜா மற்றும் திமுகவை காப்பாற்றும் நோக்கில் தி ஹிந்துவில் பல கட்டுரைகள் எழுதப்பட்டன.
முத்தாய்ப்பாக ஆ.ராசா அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நாளான நவம்பர் 10 ம் தேதியில் ஆர்.கே .ராதாகிருஷ்னன் மீண்டும் ஆ.ராசாவை ஒரு பேட்டி எடுத்து அது வெளியாகிறது. சாதாரணமான கேள்விகளாக கேட்டு, ஆ.ராசா மற்றும் திமுகவை நல்ல வெளிச்சத்தில் காட்ட முனைந்த அந்த பேட்டி ,மனசாட்சி உள்ள எந்த பத்திரிக்கையாளரையும் வெட்கி தலைகுனிய வைக்கும் .அந்த அளவுக்கு ஆ .ராசாவின் ஊதுகுழலாக ஒலித்த அந்த பேட்டியை விமர்சனம் செய்து இன்றும் இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன.
இந்த ஆர்.கே .ராதாகிருஷ்னன் வேறு யாருமில்லை. நீங்கள் அன்றாடம் தொலைக்காட்சிகளில் காணும் அதே ஆர்.கே.தான். இன்றும் 2 ஜி அலைக்கற்றையில் ஊழலே நடைபெறவில்லை என்றே விவாதங்களில் திமுக ஆதரவு குரலாக இவர் ஒலிப்பதன் பின்னணி இதுதான் . இன்றும் தி ஹிந்துவில் திமுகவின் விவகாரங்களை பற்றியோ ,அல்லது கனிமொழிக்கு ஆதரவான பேட்டிகளையோ எழுதி வெளியிடுவார் இந்த பத்திரிகையாளர் ஆர்.கே .
தி ஹிந்து, 2 ஜி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் ஆ.ராசாவுக்கு ஆதரவாக செயல்பட்டதைக் கண்டித்து தி ஹிந்துவின் குழுமத்திலலேயே பல விமர்சனங்கள் எழுந்து, பின் என்.ராமின் சகோதரர்கள் என்.ரவி , என் .முரளி மற்றும் மாலினி பார்த்தசாரதி ஆகியோர் அறிக்கையே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் .
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை கீழ்காணும் சுட்டியில் படிக்கலாம்
http://savethehindu.blogspot.com/2011/05/2g-scam-coverage-letter-from-nravi.html
ஆக எமர்ஜென்சி காலம் முதல் இன்று வரை காங்கிரஸ் ஆட்சிக்கால ஊழல்களை பற்றி பெரிதாக எழுதாமல், காங்கிரசின் ஊதுகுழலாகவே தி ஹிந்து செயல்படுவதை யாருமே மறுக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெரும் 2ஜி வழக்கு, இப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் உள்ளது