காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறி வைத்து, ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமைப்பு நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீரில், ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிச்சேர சென்று கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு பயங்கரவாதி வெடிகுண்டுகாரை ஓட்டி வந்துள்ளான். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.
இந்த காரை ஓட்டி வந்தவன் அடில் அகமது எனவும், அவன் புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான். தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அடில் அஹமது ஓட்டி வந்த கார் மத்திய காவல் படை வீரர்கள் மீது போதிய சிசிடிவி வீடியோ காட்சி இதோ;