செய்திகள்விளையாட்டு
2019 ஐபிஎல் 2 வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு: சிஎஸ் கே தான் முதல் போட்டியில் விளையாடுகிறது
2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இது 12 வது ஐபிஎல் போட்டியாகும்.
சென்னையில் மார்ச் 23-ம் தேதி மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.
இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்(டேர்டெவில்ஸ் பெயர்மாற்றம்).மும்பை, இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன்பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
மார்ச் 23-ம்தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5-ம் தேதி வரை உள்ள பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
(Visited 35 times, 1 visits today)