மேற்கு வங்காள காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் கௌரவ் தத் .
1986 ஆம் ஆண்டு ஐபிஸ் அணியை சேர்ந்த இவர் , கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று தனது மனைவியுடன் கல்கத்தா நகரில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 19ம் தேதி காலையில் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மருத்துவ பரிசோதனையில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இவரது வீட்டில் இருந்து இவர் கைப்பட எழுதிய தற்கொலைக்கான கடிதம் கண்டு எடுக்கப்பட்டு ,ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
இவர் தனது தற்கொலை கடிதத்தில் , தனக்கு வர வேண்டிய ஓய்வூதிய பலன்கள் சுமார் 72 லட்சம் பணத்தை மேற்கு வங்க அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், தன்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த பத்து ஆண்டுகளாக பழி வாங்கிவருவதாகவும் ,தனது தற்கொலைக்கு காரணம் மம்தாவே என்று நேரடியாகவே குற்றம் சாட்டி எழுதியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட காவல் துறை அதிகாரியின் தந்தை கோபால் த்தும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக பணி புரிந்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காவல் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.