குறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.
2019-20ஆம் ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட், பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பிரதமர் கிஷான் சம்மன் யோஜனா திட்டம் மூலம் இரண்டு ஹெக்டேர் நிலப்பரப்பு அல்லது அதற்கு குறைவாக நிலம் பெற்ற 12 கோடி சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரூ. 75,000 கோடி பணம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் என மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ. 6 ஆயிரம் வரவு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
இதே நாளில் தமிழகத்திலும் எடப்பாடி பழனிச் சாமி அரசு கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2000 ரூபாய் அளிக்க உள்ளது. தேர்தலில் இது விவசாயிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகின்றனர்.