பிரயாக்ராஜ்: உபியில் உள்ள பிரயாக்ராசில் கும்பமேளா பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கும்ப மேளாவில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் மோடி, இன்று கங்கையில் புனித நீராடினார். பல்வேறு பீஜைகளையும் செய்த அவர் , கங்கையை சுத்தம் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளிகளின் கால்களைக் கழுவி சுத்தம் செய்தார்.
இதைத் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட மோடி, இந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. தேசத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பகிர்ந்துள்ளார்.
பூஜைக்குப் பின்னர் முக்கிய சாதுக்களையும் சந்தித்துப் பேசினார் மோடி. அவர் துப்புரவுத் தொழிலாளிகளின் கால்களைக் கழுவி சுத்தம் செய்த வீடியோ காட்சி:
(Visited 31 times, 1 visits today)