இலக்குவணபுரி : பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர்களான மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவத்துள்ளனர்.
இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தார் மாயாவதி.
காங்கிரசுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை என்று சொன்ன அவர், காங்கிரஸ் இல்லாமலேயே தங்கள் அணி வெற்றி பெரும் என்றும் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் செய்வதறியாமல் உள்ளது. இதற்குக் காரணமுள்ளது. ஏனெனில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகள் 80. அமேதி, ரேபரலி தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவது இயலாத காரியமாக மாறி உள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை வீழ்த்த மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கைகோர்த்துள்ளனர். 1993 லும் பாஜகவை வீழ்த்தவே இவ்விரு கட்சிகளும் கடந்த காலத்தில் கூட்டணியை அமைத்தன என்பது குறிப்பிடத் தக்கது.