பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டி ஸ்டெர்லைட் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தது. அதில் தமிழக அரசு , தங்களது ஆலையை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது ஸ்டெர்லைட்.
ஸ்டெர்லைட்டின் இந்தக் கோரிக்கையை நிராகர்த்து விட்டனர் நீதிபதிகள் எம் சத்யநாராயணன் , எம் நிர்மல் குமார். இடைக்கால தடை விதித்ததுடன் மாசுக் கட்டுப்பாட்டை ஒழுங்குக்குள் இருக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்று எச்சரிக்கை செய்தது.
ஸ்டெர்லைட் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அரிமா சுந்தரம், இந்த ஆலையை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதால் தான் கோரிக்கை வைக்கிறோம் என்றும், ஆலையை இயக்கப்போவது இல்லை என்றும் கோரிக்கை வைத்தார். ஒருவேளை இந்த ஆலையின் வழக்கில் நாங்கள் தோற்றால் ஆலையை நிரந்தரமாக மூடுதலும் வேறு எங்கேனும் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாதிட்டார்.