பிஜேபியில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக எம்.பி பூணம் மாடம் முன்னிலையில், தன்னை அதிகாரப்பூா்வமாக அக்கட்சியில் இணைத்துக் கொண்டாா்.
கடந்த ஆண்டு மே மாதம் இவரது காரில் மோதிய போலீஸ் கான்ஸ்டபிளை அடித்ததால் பரபரப்பாக பேசப்பட்டார் ரிவாபா. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் காா்னி சேனா அமைப்பின் மகளிரணித் தலைவியாக நியமிக்கப்பட்டாா். மேலும் கடந்த ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவும், ரிவாபாவும் கடந்த மாதம் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனா். அப்போதே ஜடேஜா இணைவாரா என்ற பேச்சு எழுந்தது.
ஏற்கனவே சேவாக், காம்பிர் பாஜகவில் இணையாவிட்டாலும் பாஜக சிந்தனை கொண்டவர்கள். இதனை அவர்களின் ட்விட்டர் பக்க செய்திகளில் காண இயலும். வரும் லோக்சபா தேர்தலில் பல சினிமா, கிரிக்கெட் பிரபலங்களை இணைப்பதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.