செய்திகள்தமிழ்நாடு

திமுக தலைமையிலான அணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 லோக்சபா இடங்கள் ஒதுக்கீடு

சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. அதன் படி திமுக தலைமையிலான அணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 லோக்சபா இடங்கள் ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

 

விடுதலைச்  சிறுத்தைகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா என்ற அறிவிப்பு வெளியிடவில்லை. சூழலைப் பொருத்து முடிவு எடுக்கப்படும் என்று வி.சி.கே தெரிவித்து உள்ளது. இருந்த போதிலும் 2 இடங்கள் ஒதுக்கீடு செய்து இருப்பதால் அனேகமாக உதய சூரியன் சின்னத்தில் தான் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் போல் தெரிகிறது.

 

சிதம்பரம் , திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் தொகுதி பற்றிய அறிவிப்பு வெளிவருகிறது.

(Visited 25 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close