வரிசை எண் |
தேதி |
இடம் |
விவரம் |
கைது எண்ணிக்கை |
காரணம்/தொடர்புடைய அமைப்பு |
1 |
20-மார்ச்-2016 |
சென்னை(தமிழ்நாடு) |
சி.பி–சிஐடி, சென்னை (தமிழ்நாடு) கள்ள நோட்டு மோசடி தொடர்பாக மூன்று நபர்களை கைது செய்தது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சித்தீக், சையத் மற்றும் கணேஷ் கைது செய்யப்பட்டனர். கள்ள நோட்டு ஒழிப்பு பிரிவை சேர்ந்த CB-CID அதிகாரிகள் அவர்களை கைது செய்தது. “மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவிற்கு இந்திய–பங்களாதேஷ் எல்லைகள் வழியாக ஊடுருவி |
3 |
கள்ள நோட்டுக்கள் |
2 |
15-ஏப்ரல்-2016 |
மாதாவரம் / சென்னை / திருவள்ளூர் மாவட்டம் |
2014 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி, மேற்கு வங்கத்தில் நடந்த “பர்ட்வான் குண்டுவெடிப்பு” தொடர்பாக விசாரணை நடத்த, திருவள்ளூர் மாவட்டத்தில்,சென்னை நகரில் உள்ள மாதவரம் பகுதியில் இருந்து, 23 வயதுடைய ஒரு டிரைவர், NIA (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர் “பர்ட்வான் குண்டுவெடிப்பு” தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் N IA இன் ஒரு குழு, மாதவரம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஈபின் அப்துல்லாவைத் கைது செய்தனர். பர்ட்வன் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட மற்றொரு நபரின் விவரங்களைப் பெற அதிகாரிகள் அவரை மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தனர்.அனால், அப்துல்லாவுடன் முன்னர் வசித்த அந்த நபர் சென்னையை விட்டு வெளியேறி கேரளாவில் மறைந்து இருப்பதாக தெரிய வந்தது. NIA வால் பெரிதாக தேடப்பட்ட அந்த நபர் 2014 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் நடந்த “பர்ட்வன்” குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி. பர்ட்வானின் கார்கிராக் பகுதியில் இரண்டு மாடி கட்டிடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் அந்த நபர், மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவன் என்று தெரிய வந்தது. |
1 |
வெடிகுண்டு தாக்குதல் விசாரணை |
3 |
02-ஜூன்-2016 |
தஞ்சாவூர் மாவட்டம் |
பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு (ISIS – ஐ.எஸ்.ஐ.எஸ் ) இல் சேர சூடானுக்கு சென்ற முஹம்மது நாசர் என அடையாளம் காணப்பட்ட 23 வயதான ஹேக்கர் மீது NIA குற்றச்சாட்டு ஒன்றை தாக்கல் செய்தது. குற்றசாட்டின்படி, மொஹமட் நாசர், அவரது தந்தைக்கு அனுப்பிய ஒரு குறுந்செய்தி அவருக்கு எதிராக சாட்சியங்களின் முக்கியமான ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 25, 2015 அன்று துபாயின் வழியாக சூடானை அடைந்த போது அவர் தனது தந்தையிடம் ஒரு குறுந்செய்தியை அனுப்பி இருந்தார். அது : “பிரார்த்தனை செய்யுங்கள், ஏனெனில் நான் என் ஜெபத்தில் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்.ஜானட் (சொர்க்கம்) … நான் இஸ்லாமிய அரசுக்கு வந்துள்ளேன், இது உங்களுக்கு கிறுக்குத்தனமாக தெரியும் என்று எனக்கு தெரியும் ஆனால் உங்கள் மகன் உண்மையிலேயே அதன் ஊழல் கொண்ட ஜனநாயகம் அமைப்பில் இருந்து வெளியேற இந்த தைரியமான நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது…. திரும்ப வரப்போவதில்லை. ” தஞ்சாவூர் (தஞ்சாவூர் மாவட்டம்) வசிப்பவர் முஹம்மது நாசர் முதலில், அவரது தந்தை வேலை செய்யும் துபாய்க்கு அக்டோபர் 2014 ல் சென்றார்.அவரது 90 நாள் விசா காலாவதியானபோது அவர் இந்தியா திரும்பினார். மே மாதம் 2015 ம் ஆண்டு பணி விசாவில் அவர் மீண்டும் துபாய் சென்றார். இதற்கிடையில் பிப்ரவரியில் அவர் இந்தியாவில் இருந்த அதே ஆண்டில், ISIS பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ட்விட்டர் பயனாளியான டாஸாவுடன் தொடர்பு கொண்டார், இது அவரை ஊக்குவித்தது. அவர் சிரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். ட்விட்டர் பயனாளியான பரிந்துரைத்ததின் பேரில்WhatsApp குழு, ‘இஸ்லாம் Q மற்றும் ஏ‘ – வில் இணைந்தார்.பின்னர், ஏப்ரல் மாதத்தில், அவர் இடைமறித்துக் பார்ப்பது கடினம் கடினம் என்பதை அறிந்தபின்,டெலிகிராம் என்ற பாதுகாப்பான வலை அடிப்படையிலான விண்ணப்பத்திற்கு மாறினார். “பல்வேறு ISIS குழுக்களில் பங்கெடுத்துக்கொண்ட அவர், ஹிஜ்ரத் [குடிபெயர்ப்பு] செய்வதற்கு பலமுறை தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்“.அவரது செய்திகளுக்கு யாரும் பதிலளித்திருக்கவில்லை. ஆகஸ்ட் 2015 ல் அவர் மற்றொரு ட்விட்டர் பயனாளியான மேட்முல்லாவுடன் தொடர்பு கொண்டார். அவர் முஹம்மது நாசர் சூடானுக்கு செல்ல விசா ஏற்பாடு செத்து கொடுத்தார்“.இவ்வாறு ஒரு மூத்த NIA அதிகாரி கூறினார். |
1 |
ஐ எஸ் ஐ எஸ் (ISIS)தொடர்பு |
4 |
05-ஜூன்-2016 |
தஞ்சாவூர் மாவட்டம் |
ஐ.ஓ.சி.எல் நிர்வாக தலைமை பணியாளராக இருந்து கொண்டு இஸ்லாமிய அரசு (ISIS –ஐ.எஸ்.ஐ.எஸ்) பிரச்சார் மற்றும் ஆள் சேர்க்கும் நபராக வேலை செய்து கொண்டு இருந்த முகமது சிராஜுதின் தான் கணினி உலகில் செய்து வந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு குறித்து சாட்சியமளித்திருந்தார். முகமது சிராஜுதின் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்கும் இளைய நபர்களை குறி வைத்து கவனம் செலுத்தியது தெரிய வந்தது.ஜெய்ப்பூரில் உள்ள ஐஓசிஎல் உதவி மேலாளராக பணிபுரிந்த சிராஜுதின், சிரியாவிற்கு குடிபெயரும் தனது திட்டத்தை பற்றி ராஜஸ்தான் தனது மனைவியிடம் கூறினார். 2015 ஆம் ஆண்டில், சூடானில் இருந்து நாடு கடத்தி கைது செய்யப்பட்டு NIA இன் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளரான மொஹம்மத் நாசரை தஞ்சாவூர் (தமிழ்நாடு)சிராஜுதின் தொடர்பில் இருந்து வந்துள்ளார். NIA சமீபத்தில் Naser, ஐ முக்கிய சாட்சியாக மாறிய அவனது தந்தையை சேர்த்து குற்றச்சாட்டு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தது. தீவிரவாதத்தின் சுய–தீவிரவாத ஆதரவாளரான சிராஜுதின் பரந்த வெளிநாட்டு தொடர்பு இருந்தது.அவரது இலக்குகள் பாதிக்கப்பட்ட பெண்களை உள்ளடக்கியிருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடிப்படையாகக் கொண்ட அத்தகைய பெண்ணான அமினா, சிராஜினால் தீவிரவாத கருத்தியலுக்குள் இழுக்கப்பட்டு, அவனை திருமணம் செய்து கொள்ளவும், பின்னர், அவனது முதல் மனைவியுடன் சிரியாவிற்கு அவனை அழைத்துச் செல்ல விரும்பினார். |
n |
ஐ எஸ் ஐ எஸ் (ISIS)தொடர்பு |
5 |
13-ஜூன்-2016 |
புதுக்குடி கிராமம் /திருநெல்வேலி மாவட்டம் |
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புதுக்காடு கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் டேனியல் பிரகாஷ், 2013 இல் கர்நாடக,மல்லேஸ்வரம் பி ஜே பி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த ஸ்லீப்பர் செல்கள் மற்றும் அது தொடர்பான சூழ்ச்சிகளில் ஈடுபடும் நபர்களிடம் அவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. 2011 ல் மதுரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும், அலம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியே வெடிகுண்டுகளை நிரப்பி பா.ஜ.க தலைவர் எல்.கே. அத்வானிவை கொள்ள திட்டமிட்ட அல் உம்மா பயங்கரவாதிகளுக்கு டேனியல் பிரகாஷ் வெடிகுண்டுகளை கொடுத்திருந்தார். 2012 ம் ஆண்டு திருநெல்வேலி நகரில் பயங்கரவாதிகள் நடத்த இருந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றிற்கு டேனியல் பிரகாஷ் வெடிகுண்டுகளை கொடுத்திருந்தார் என்று மத்திய குற்றபிரிவு கிளை உதவி ஆணையர் வேங்கடேஷ் பிரசன்னா தெரிவித்தார். |
1 |
வெடிகுண்டு தாக்குதல் விசாரணை |
6 |
15-ஆகஸ்ட்-2016 |
மல்லேஸ்வரம் |
2013 ம் ஆண்டு மல்லேஷ்வம் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டின் தடைசெய்யப்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த நபரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 2013, ஏப்ரல் 17 ம் தேதி பி.ஜே.பி.அலுவலகத்திற்கு வெளியில் வெடிகுண்டு நடத்திய பயங்கரவாதிகளுக்கு குண்டுவெடிப்பில் இரண்டு மாணவர்கள் உட்பட 18பேர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம்,சத்யமங்கல பிரதேசத்தில் ஒரு மறைவிடத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டார். 1998 கோயமுத்தூர் குண்டுவெடிப்பில் குட்டி குற்றம் சாட்டப்பட்டார்,இது 50 நபர்களைக் கொன்றது. அவர் 12 ஆண்டுகளாக சிறையில் இருந்தார், 2010 ல் விடுவிக்கப்பட்டார். “1998 ல் திரைப்பட இயக்குனரான மணிரத்னத்தின் வீட்டின் வெளியே குண்டுவெடிப்பில் பிரதான குற்றவாளி குட்டி ஆவார். அவர் 1998 ல் தமிழ் நாட்டிலும் நடந்த நான்கு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டிருந்தார். குட்டி பொருட்களின் சேகரித்தல் மற்றும் போக்குவரத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர். அவர் பல்வேறு கடைகளிலிருந்து வாங்குவதோடு,இரண்டாவது முறையாக கடைக்குத் திரும்புவதைத் தவிர்ப்பார். குறிப்பாக ஒரு குவாரி ஒப்பந்தக்காரராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் , குட்டி உரிமையாளர்களை அணுகி, ஜெலட்டின் குச்சிகள் ,டைமர், கம்பி, பேட்டரி ஷெல் மற்றும் இரும்பு துகள்கள், போன்றவற்றை வாங்கிக்கொள்வார் என போலீஸ் கூறினார். குட்டி உட்பட பதினேழு (17) குற்றவாளிகள் இதுவரை மல்லேஷ்வம் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். |
1 |
அல் –உம்மா |
7 |
26-ஆகஸ்ட்-2016 |
இந்தியா |
இந்த மாத ஆரம்பத்தில், ஜிகாதி கருத்துக்களை உருவாக்கி மற்றும் பரப்புவதை செய்யும்,உலகளாவிய இஸ்லாமிய ஊடக முன்னணி (Global Islamic Media Front (GIMF)), என்ற ஒரு சர்வதேச தடைசெய்யப்பட்ட அல்–கொய்தாவின்(AQ ) துணை அமைப்பு ஒரு புதிய கிளை GIMF துணை கண்டம் என்றை உருவாக்கியது. அது, அவர்களது குழுக்கள் வெளியும் வீடியோக்கள், செய்திகள் மற்றும் இதழ்கள் ஆகியவற்றை ஹிந்தி, பெங்காலி, உருது மற்றும் தமிழ் மொழிபெயர்க்கும். அதன் ஆதரவாளர்களும் தென்னிந்தியாவில் ஆட்சேர்ப்புக்காக முஸ்லீம் இளைஞர்களை அடைய, குறிப்பாக தமிழ் மற்றும் மலாய் பேச்சாளர்களை இலக்காகக் கொண்ட பெரிய பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். பங்களாதேஷில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இஸ்லாமிய அரசு (ISIS) மற்றும் AQ இரு பயங்கரவாத குழுக்களும் இந்திய துணை கண்டத்தில் தங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. ஆங்கிலம், அரபிக், பிரஞ்சு போன்ற மொழிகளை தொடர்ந்து பெங்காலி மொழியில் அதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டதால் ISIS அதிகமான ஆதரவாளர்களை பெற்று வருகிறது. IS பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கு, AQ கூட தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் செய்திகள்,வீடியோக்கள் மற்றும் ஜிகாதி இலக்கியங்களை பரப்புகிறது. இது பெரிதும் Facebook மற்றும் சமூக ஊடக தளத்தை பிரச்சாரத்திற்கும் தகவல்தொடர்புக்கும் பயன்படுத்துகிறது. தமிழ் அன்சாரின் மற்றும் ஆலிவின் சரத்து(ஆலிவ் மரத்தின் நிழலில்) போன்ற குழுக்கள், இந்திய கண் மூலம் சிரியா, AQ மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தொடர்ந்து தகவல்களை கொடுத்து வருகின்றன. |
n |
உளவு பிரிவு /முன்னெச்சிரிக்கை /பாதுகாப்பு |
8 |
03-அக்டோபர்-2016 |
தமிழ்நாடு |
இஸ்லாமிய அரசு (ISIS) அமைப்பு தொடர்பு சம்மந்தமாக ஆய்வு செய்து தமிழ்நாட்டிலிருந்து ஒரு நபர் NIA (தேசிய புலனாய்வு அமைப்பால்) கைது செய்யப்பட்டார் |
1 |
ஐ எஸ் ஐ எஸ் (ISIS)தொடர்பு |
9 |
05-அக்டோபர்-2016 |
திருநெல்வேலி / தமிழ்நாடு |
ஐ.எஸ்.ஐ. எஸ் இல் இணைந்து caliphate என்று அழைக்கப்படும் குழுவுடன் சேர்ந்து, ஈராக் மற்றும் சிரியாவில் பல மாதங்கள் சண்டையிட்ட விட்டு இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு இந்தியா திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நபரை NIA (தேசிய புலனாய்வு அமைப்பு) கைது செய்தது. தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இருந்து வந்தவர் சுபானி ஹாஜி மொய்தின் (31) என்ற அபு மீர் . இவர் சிரியா மற்றும் ஈராக்கில் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை தங்கியிருந்தார். அங்கு மூத்த தலைவர்களை சந்தித்து கூட்டு படைகளுடன் சேர்ந்து சண்டை இட்டுள்ளார். மஜீத் இமாம் ஒமர் அல்–ஹிந்தி தலைமையிலான சமீபத்திய ஐ.எஸ்.எல் தொகுதியுடன் மீர் தொடர்பு கொண்டதாகவும் அது தொடர்பான விசாரணையை நடைபெறுவதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை (கல்யாண்) சார்ந்த ஆரிப் மஜீத் ஐ.ஐ.எஸ் உடன் இணைந்து போராடி இந்திய இந்தியர்களால் கைது நடந்த பின்பு மீரா இரண்டாவது நபரை கைதானார். அக்டோபர் 2014 இல் அரீப் மஜீத் சிரியாவில் இருந்து இந்தியா திரும்பிய பின் பிடிக்கப்பட்டார்.மீர் 2014 ல் இருந்து NIA மற்றும் மாநில காவல்துறை இந்தியாவில் 60 ISIS ஆட்களை கைது செய்துள்ளனர். இதில் மீர் மற்றும் மஜீத் ஆகியோர் அடிப்படையில் பயங்கரவாத அமைப்பின் “வீரர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். |
1 |
ஐ எஸ் ஐ எஸ் (ISIS)தொடர்பு |
10 |
11-அக்டோபர்-2016 |
ஆலந்தூர் / சென்னை |
சென்னை நகரிலுள்ள ஆலந்தூரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 26 வயதான கரியுதுல்லா –வை2,46,000 ரூபாய் மதிப்புள்ள (Fake Indian Currency Notes – FICN) கள்ள நோட்டுக்களுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கள்ள நோட்டுக்கும்பலின் ஒருவனாக இருக்கலாம் என்று கலைத்துறை நம்புகிறது. பாகிஸ்தானில் அச்சிடப்பட்டு பங்களாதேஷ் வழியாக கள்ள நோட்டுக்கள் கடத்தப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் இருந்து ஹஜர்கானாவில் குடிசையில் தனது துணைத் தலைவர் அப்துல் வஹாப் உடன் தங்கியிருப்பதாக கரியுதுல்லா கூறினான். காவல்துறையினர் அந்த இடத்தை தேடி வந்த போதிலும், அப்துல் வஹாப் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறை அந்த குறிப்பிட்ட பகுதியில் தேடி பார்த்த போது அப்துல் வஹாப் இருந்த அடையாளம் ஏதும் காவல்துறைக்கு கிடைக்க வில்லை. தனது சொந்த ஊரில், ஒரு ஏஜெண்டிடம் கமிஷன் பெற்று கொண்டு கள்ள நோட்டுக்களை எடுத்து வந்ததாக கரியுதுல்லா கூறினார். |
1 |
கள்ள நோட்டுக்கள் |
11 |
12-அக்டோபர்-2016 |
கோயம்புத்தூர் |
NIA(தேசிய புலனாய்வு அமைப்பு) –வின் விசாரணையைத் தொடர்ந்து, கோயம்புத்தூரில் இஸ்லாமிய அரசு (ISIS) உடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் குறைந்தது மூன்று பேர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டதாக மூன்று பேரும், கேரளாவில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்த ஆறு நபர்கள் உள்ள இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த கைது சம்பவம், ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) நபர்கள் குறித்து NIA வின் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் பின்னர் நடந்தது. 15 இளைஞர்களை தேடுவது தொடர்பாக கடந்த 11நாட்களாக விசாரணை நடை பெற்றது. இப்போது, அந்த 15 நபரில், 3 நபர்களை காவல்துறை அழைத்து சென்றனர். அறிக்கைகளின் படி, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) ஐ.எஸ்.ஐ. ஆள் சேர்க்கும் நபர்கள், ஸ்லீப்பர் செல்கள் இயங்குவதாகவும், அவ்வாறு செயல்படுபவர்களை புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து இத்தகைய மக்களைத் தொடர்ந்து வேட்டையாடுவதில் ஈடுபட்டு தேசத்திற்கு எதிரான செயல்களை முறியடித்து வருகின்றன. |
3 |
ஐ எஸ் ஐ எஸ் (ISIS)தொடர்பு |
12 |
17-அக்டோபர்-2016 |
செவ்வாப்பேட் / திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) அருகிலுள்ள செவ்வாப்பேட்டில் 1,000 ருபாய் கள்ள நோட்டுக்களை(Fake Indian Currency Notes) புழக்கத்தில் விட்ட பீகாரை சேர்ந்த ஜமியானா என அடையாளம் காணப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கள்ள நோட்டுக்கும்பலோடு இவனுக்கு தொர்டுபு இருக்கிறதா என் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கள்ள நோட்டுக்களை பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்காளம் கடத்தி வந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லும் செயல் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். |
1 |
கள்ள நோட்டுக்கள் |
13 |
23-அக்டோபர்-2016 |
தமிழ்நாடு |
NIA விசாரணையில், தமிழ்நாட்டின் அரசு ஐ எஸ்.ஐ எஸ் (ISIS) குழுவின் இந்தியாவில் செயல்படும் சுபஹானி ஹாஜா மொய்தின், பாரிஸ் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவர் தனது “குழுத் தலைவர்” என்று அறிவித்தான். விசாரணையின்போது, 2015 பாரிஸ் தாக்குதல்களை நடத்திய இரண்டு தீவிரவாதிகளான,பெல்ஜியம் நாட்டை சேர்ந்த அப்துல் ஹமித் அபௌத்,சலாஹ் அப்துஸ்லாம் மற்றும் உமர் இஸ்மாயில் பெயர்களை குறிப்பிட்டான். அபௌத் பிரான்சு காவல்துறை நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டான்.அப்துஸ்லாம் மார்ச் மாதம் பிரான்சு அதிகாரிகளால் பெல்ஜியமில் கைது செய்யப்பட்டான். பாரிஸ் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவர் தனது “குழுத் தலைவர்” என்று கூறிய மொய்தின், பெயரை குறிப்பிடவில்லை. மொய்தின் கூறுவது பொய்யாக இருக்க கூடும் என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினார். அவர் ஏப்ரல் 8 ம் தேதி , 2015 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு, சென்னையில் இருந்து இஸ்தான்புல்,துருக்கி சென்றார். பின்னர் மொய்தீன் சிரியாவிற்கு ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் இருந்து மேலும் ஜிகாதிகளை அனுப்பினார். ஐ எஸ்.ஐ எஸ் (ISIS) ஈராக் தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டை செய்த மொய்தின் , நேரடியா போரில் ஈடுபட்ட “போர் அனுபவ பயிற்சி (battle-hardened)” இந்திய நாட்டை சேர்ந்த பயங்கரவாதி என்று கூறப்படுகிறது. “மொய்தின், துருக்கியில் இருந்து ஈராக் செல்லும் போதும், பயிற்சியின் போதும், அவனுக்கு மத போதனை வகுப்புக்களும், AK -47 துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், கிரேநெட் ஏவுகணை இயக்குதல் , வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் பாக்கெட்டை பயன்படுத்துதல் பயிர்ச்சி தரப்பட்டதாக கூறினான்“. பாரிஸ் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவர் அந்த குழுவிற்கு தலைவனாக இருந்ததாக கூறியதாகவும், ஒரு பாதுகாப்பு நிறுவன அதிகாரி குறிப்பிட்டார். |
NA |
ஐ எஸ் ஐ எஸ் (ISIS)தொடர்பு |
14 |
28-நவம்பர்-2016 |
மதுரை மாவட்டம் |
மதுரை மாவட்டத்தில், ஏப்ரல் 2016 முதல்,தென்னிந்திய நீதிமன்றங்களில் நடந்த ஐந்து குண்டுவெடிப்புகள் தொடர்பாக ”Base Movement'(பேஸ் மூவ்மெண்ட்)’ என்ற அமைப்பை சேர்ந்த மூன்று நபர்கள் NIA (தேசிய புலனாய்வு அமைப்பு ) –வால் கைது செய்யப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு போலீஸ் மற்றும் தெலுங்கானா காவல்துறையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில்,தென்னிந்தியாவில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் அவர்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதை ஒத்துக்கொன்றதாக NIA வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்ஐஏ(NIA) படி, மதுரையை சேர்ந்த சென்னையில் வசித்து வரும் அப்துல்லா அனைவரையும் வழி நடத்தி உள்ளார். ராஜா மற்றும் அப்பாஸ் அலி ஆகியோர் மதுரையை சேர்ந்தவர்கள். |
3 |
வெடிகுண்டு தாக்குதல் விசாரணை + BASE MOVEMENT (பேஸ் மூவ்மெண்ட்) |
15 |
29-நவம்பர்-2016 |
தமிழ்நாடு |
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைபெறும் தென் இந்தியாவின் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு தொடர் விசாரணையில், குண்டுவெடிப்பு நிகழ்த்த சதிவேலையில் ஈடுபட்டதாக ஏப்ரல் முதல், NIA, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா காவல்துறை உதவியுடன் ஒரு நாளைக்கு முன்பு அப்பாஸ் அலி, தாவூத் சுலைமான் மற்றும் சாம்மு கரிம் ராஜா ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டனர். பள்ளிப்படிப்பை பத்தியில் விட்ட அலி,பெயின்டராக பணிபுரிந்துகொண்டு, மதுரையில்‘டூலுல்ம்ம்‘ எனும் பெயரில் ஒரு நூலகத்தை இயக்கி வருகிறான். ராஜா ஒரு வர்த்தக பட்டதாரி மற்றும் மதுரை கனி மாற கோயில் தெருவில் ஒரு கோழி இறைச்சி கடை நடத்துகிறார். சுலைமான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தார். ஒசாமா பின்லேடன் சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதக் குழுவின் பிரதான தலைவராக அவர் இருந்தார். இந்த குண்டுவீச்சிற்கு பொறுப்பேற்ற இந்த குழு மற்றும் அல் கொய்தா என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பு “பேஸ் இயக்கம்” என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள், பென் டிரைவ்கள் (pen drive) மற்றும் குறுந்தகடுகள் ஆகியவற்றின் விநியோகித்து வந்தது. |
2 |
வெடிகுண்டு தாக்குதல் விசாரணை + BASE MOVEMENT (பேஸ் மூவ்மெண்ட்) |
16 |
30-வம்பர்-2016 |
தமிழ்நாடு |
தென்னிந்தியாவில் இருந்து செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு புதிய பாதுகாப்பான புகலிடமாக கேரளாவைத் தொடர்ந்து தமிழகம் உருவானது என்று சென்னையிலுள்ள மூத்த புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். நவம்பர் 28-29 தேதிகளில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஐந்து கைது செய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியா முழுவதும் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், பல்வேறு படுகொலைகளை நடத்தவும் சதி வேலையில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டிலும், கேரளத்திலும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும், பல்வேறு பிரிவினைவாத நடவடிக்கைகளை நாங்கள் தீவிரமாக கண்காணித்துள்ளோம், இந்த கைதுகள் அனைத்தும் எங்கள் உளவுத்துறையில் சேகரிக்கப்பட்ட துல்லியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை “என்று ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கும் தீவிரத்தை அனைத்து உளவு நிறுவனங்களும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். “அனைத்து சந்தேகநபர்களும் எங்கள் ராடாரில் எப்போதும் இருக்கிறார்கள், எனவே பீதி அடைய தேவை இல்லை” என்று அவர் கூறினார். |
5 |
உளவு பிரிவு /முன்னெச்சிரிக்கை /பாதுகாப்பு பிற தீவிரவாத இயக்கம் |
(Visited 58 times, 1 visits today)