இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய அணி வெற்றி
நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியில் வீராத் கோலி 116 ரன்களைக் குவித்தார். விஜய் ஷங்கர் 46 ரன்களை எடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா, தோனி இருவரும் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. ஜடேஜா 21 ரன்களை எடுத்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். சாம்பா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அடையாமல் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்களில் தோற்றது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டுனிஸ், ஹான்ட்ஸ்கொம்ப் இருவரும் 52, 48 ரன்களை எடுத்தனர். பின்ச், காவாஜா 37,38 ரன்களை எடுத்தனை. இந்திய அணியில் குல்திப் யாதவ் 3 விக்கெட்டுக்களை எடுத்தார். விஜய் ஷங்கர், பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர்.
கடைசி ஓவரில் தமிழகத்தின் விஜய் ஷங்கர் வெற்றிக்கு கை கொடுத்தார். விஜய் ஷங்கர் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. இதில் அசத்திய ஷங்கர் முதல் பந்தில் ஸ்டாய்னிசை (52) வெளியேற்றினார். மூன்றாவது பந்தில் ஜாம்பா (2) போல்டாக, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதன் மூலம் இந்தியா ஒருநாள் போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.