தேர்தல் ஆணையம் நேற்று மாலை பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது.
நாடு முழுவதும் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நேற்று முதலே நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
21 மாநிலங்களுக்கான தொகுதிகளில் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலானது மேற்கு வங்காளம் ,பீகார் மற்றும் உத்தர பிரதேஷ் மாநிலங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படுவுள்ளது.
ஆனால் குறிப்பாக மேற்கு வங்காளத்தில் 7 கட்டங்களாக நடத்தப்பட இருக்கும் தேர்தலையே பத்திரிகையாளர்கள் கவனத்துடன் குறிப்பிடுகின்றனர் .
ஏனெனில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில், மேற்கு வங்காளத்தில் பிற அரசியல் கட்சிகள் பரப்புரை நடத்துவதற்கான அனுமதியையே மாநில அரசு வழங்க மறுக்கும் நிலை உள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆடியநாத் பிரச்சாரத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் கூட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது .
கடந்த காலங்களில் பெருமளவில் வன்முறையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் இப்போது மம்தாவின் கட்சியில் ஐக்கியமா உள்ளனர்.
நிர்மலா சீதாராமன் போன்ற மத்திய அமைச்சர்களே மேற்கு வங்காளத்தில் இயல்பான தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்ற் கோரிக்கையை எழுப்பியதன் காரணமே அங்கே மாநில அரசு தந்து அரசு இயந்திரங்களை முழு அளவில் பயன்படுத்தி ,சுமுகமான தேர்தலை நடத்த விடாமல் செய்யும் என்ற சூழல் நிலவுவதால்தான் .
மேலும் மத்திய அரசின் எந்த நல்ல திட்டங்களும் இதுவரை மாநில அரசு ,தன் மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்து வரும் அவலநிலை அங்கே நிலவுகிறது.
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டமோ, விவசாயிகளுக்கான 6000 ரூபாய் உதவி தொகை அளிக்கும் திட்டமோ எதுவுமே மம்தா அரசால் செயல்படுத்தப்படவில்லை. ஒரு மாநில அரசு தன் மாநிலத்தில் இருந்து சாதனையாளர்களுக்கு 4 பத்ம விருதுகளை சிபாரிசு செய்யலாம். அதைக் கூட மம்தா அரசு பரிந்துரைக்கவில்லை என்றால் அங்கே அரசு எவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை எவரும் அறிய முடியும்.
மேற்கு வங்காளத்தில் 7 கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் மத்திய போலீஸ் படையைக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து நடத்துவதன் மூலம் , சுமுகமான தேர்தலை நடத்த முடியும் என்று அனைவரும் இப்போது நம்புகின்றனர்.