மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இதுவரை இல்லாத நடைமுறையாக , ஒரு மாதம் முன்னரே தேர்தல் ஆணையம் மத்திய படைகளை மேற்கு வங்காள மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் , அந்த மாநில சட்டம் ஒழுங்கே காரணம் என்பதை பலரும் அறிவார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் கட்டவிழ்த்து நடத்திய வன்முறை வெறியாட்டதைக் ஏற்கனவே தேர்தல் ஆணையம் கணக்கில் கொண்டே அங்கே 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் தேர்தலை முறைப்படி நடத்த தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக முதலான கட்சிகள் கோரிக்கை வைத்ததன் பின்னணி என்னவென்றால் அங்கே நடந்து கொண்டிருக்கும் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் நடக்கும் வன்முறை வெறியாட்டம் என்பதை எல்லாருமே அறிவார்கள்.
இந்நிலையில் , தேர்தல் ஆணையம் முதல் கட்ட தேர்தலுக்காக ,மத்திய படைகளை சீக்கிரமே அனுப்பி இருப்பது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை கட்டுப்படுத்தத்தான் என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
(Visited 48 times, 1 visits today)