செய்திகள்பொருளாதாரம்
பணத்தைக் கட்டினார் அனில் அம்பானி.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து எரிக்சன் நிறுவனத்திற்கு 458 கோடி ரூபாய்களைக் கட்டினார் தொழிலதிபர் அனில் அம்பானி. இதற்க்கு முன்னரே உச்சநீதிமன்றத்தில் 118 கோடி கோடி ரூபாயை அவர் நிறுவனம் செலுத்தி இருந்தது.
முன்னதாக மீதிப் பணத்தை நான்கு வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்குமாறும் அப்படி கொடுக்கவில்லை என்றால் மூன்று மாதம் சிறைத்தண்டனை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
பணம் தருவதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்னால் அனில் அம்பானியின் நிறுவனம் இன்று அந்தப் பணத்தை கொடுத்துவிட்டது. இதன் மூலம் அனில் அம்பானி சிறைக்கு செல்வது தவிர்க்கப்பட்டது.
(Visited 48 times, 1 visits today)