இந்தியாவின் தேசிய கட்சியும் அதிக அளவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசத்தின் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
17-ஆவது மக்களவைக்கான தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், வளர்ச்சி, தேசியம், பொது சிவில் சட்டம், ராமர் கோவில், உள்நாட்டு பாதுகாப்பு, டிஜிட்டல் இந்தியா, விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)