மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் டிவியை உடைத்து விட்டு பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ம உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துரத்தினார்களே, அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மணமாக்கி நாட்டைத் தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?
“நீ என்னடா சொல்றது. எங்களுக்குத் தெரியும்!” எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.
(Visited 103 times, 1 visits today)