விளையாட்டு
கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 – ஒரு முன்னோட்டம்
நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை இம்முறை மே 31ம் தேதி துவங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் மோதவுள்ள பத்து அணிகளைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நாம் இன்று துவங்கி தொடர்ச்சியாக பார்ப்போம்.
தேர்ச்சி முறை
இந்த முறைதான் தர வரிசைப்படி முதல் எட்டு இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக தேர்வுப் பெற மீதமிருந்த அணிகள் தகுதி போட்டியில் மோதி அதில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அணிகள் தேர்வாகியது.
முதல் எட்டு இடங்களில் இருந்த அணிகள்
இங்கிலாந்து
இந்தியா
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
இலங்கை
பங்களாதேஷ்
தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான்
மேற்கிந்திய அணிகளும், ஆப்கானிஸ்தானும் தகுதி போட்டி மூலம் தேர்வாகி வந்தன.ஒரு கட்டத்தில் மேற்கிந்திய அணி தேர்வு பெறுமா என்ற கேள்வி இருந்தது. அவ்வாறு அந்த அணி தேர்வாகமால் இருந்திருந்தால் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணிக்கு அடுத்து அதிகம் விரும்பும் அணி மேற்கிந்திய தீவுகள் அணிதான்.
போட்டி முறை
1992க்குப் பிறகு நடந்த அனைத்து உலகக்கோப்பைப் போட்டிகளிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாகப் பிரிக்கப்பட்டு அந்த குழுவில் முதல் இரண்டு இடம் பெரும் அணிகள் அரையிறுதியில் மோதும். ஆனால் இந்த முறை அதை மாற்றி அனைத்து அணிகளும் ஒன்றுடன் ஒன்று விளையாடியாகவேண்டும். எனவே கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளும் மிக முக்கியமானவை.
அதே போன்று, இங்கிலாந்தில் சமீப காலங்களில் ஒரு தினப் போட்டிகளுக்கான பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவேப் போடப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், அங்கு சம்மரில் வழக்கம் போல் மழை ஆட்டம் காட்டினால் பந்து வீச்சாளர்கள் கை ஓங்கும் ஆனால் போன வருடம் போல் அதிக வெயில் இருந்தால் சர்வ சாதாரணமாக 300 ரன்களை எதிர்பாக்கலாம்.
அடுத்தப் பகுதியில் ஆப்கானிஸ்தான் அணியைப் பற்றி பார்ப்போம்..
– தொடரும்
(Visited 44 times, 1 visits today)