இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி
கொல்கத்தாவில் வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு மைல்கல். டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களை அதிகம் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை துவங்கியது. இந்தியா மற்றும் பங்களாதேஷை தவிர்த்து ஏனைய அணைத்து அணிகளுமே குறைந்தபட்சம் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியாவது ஆடியுள்ளன (அயர்லாண்ட் / ஆப்கானிஸ்தான் அணிகள் நீங்கலாக)
இந்நிலையில் பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றவுடன் திரு. சவுரவ் கங்குலியின் முயற்சியினால் இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக பிங்க் நிற பந்து உபயோகப்படுத்தப்படும்.
வெற்றித் தோல்வி ஒருபுறம் இருக்கட்டும். இது உண்மையில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு முக்கிய முயற்சி. இது வெற்றி பெற வேண்டும். சமீபகாலமாய் இந்தியாவில் வழக்கமான ஸ்பின் ஆடுகளங்கள் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமான ஆடுகளங்கள் தயாராகின்றன. இதுவும் ரசிகர்களை மைதானத்தை நோக்கி ஈர்க்கும். வெள்ளிக்கிழமை மதியத்தை எதிர்நோக்கி….