கோவை: எம்ஜியார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தம்பிதுரை, பின்னர் நிருபர்களைச் சந்தித்தார். பாஜகவை அவர்கள் வளர்க்கட்டும். பாஜகவை சுமந்து செல்ல நாங்கள் என்ன பாவமா செய்திருக்கிறோம் ?, பாஜகவை காலுன்ற வைக்க அதிமுகவினர் தோளில் சுமந்து செல்ல மாட்டோம். அதிமுகவை மேலும் வளர்க்கவே நாங்கள் பாடுகிறோம். லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அதிமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள்.
ஸ்டாலின் பற்றி குறிப்பிடும் போது அவருக்கு பொய் வழக்குகளைப் போடுவதும் , ஆட்களை வைத்து கோடநாடு விஷயத்தில் வீடியோ வெளியிடுவதும் எல்லாம் வெறும் பிளாக் மெயில் தான்.
கிராமம் கிராமமாக செல்வதெல்லாம் பஞ்சாயத்து தேர்தலை மனதில் வைத்துதான் என்றார். மேலும் ஸ்டாலின் லோக்சபா தேர்தலுக்குப் பின் எப்படியாவது மத்திய அரசில் இடம் பெற வேண்டுமென்பதால் தான் , மம்தா நடத்தும் கூட்டத்திற்கும் செல்கிறார். காங்கிரசுடனும் கூட்டணி வைத்திருக்கிறார். எப்படியாவது யார் ஆட்சி அமைத்தாலும் திமுகவை அங்கம் பெறச் செய்வது ஒன்றே ஸ்டாலிலின் குறிக்கோள்.