அமெரிக்காவை சேர்ந்த கேரி , வயது 19, தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போது, அங்கிருந்த ஆல்மெடா(72) என்ற மூதாட்டியை பார்த்துள்ளார். கண்டதும் காதல் கேரிக்கு ஆல்மேடா மீது ஏற்பட்டுள்ளது. கேரி தனது விருப்பத்தை ஆல்மெடாவிடம் கூறினார்.
முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆல்மெடா, பின்னர் சம்மதம் தெரிவித்தார். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்த அவர்கள், தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தங்களது திருமணத்தை உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துள்ளனர்.
(Visited 48 times, 1 visits today)
0