சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்பொருளாதாரம்

பட்ஜெட்டும், வருமான வரியும் பின்னே வங்கிக் கணக்கும்

பட்ஜெட்டில் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்துக்கான காப்பீடு 1 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருக்கு. நீண்ட நாட்களாக பலர் கேட்டுக் கொண்டிருக்கும் விசயம் இது.

பட்ஜெட்டின் அம்சங்களை குறை சொல்லிக்கொண்டிருக்கும் பலர் இது குறித்து பாராட்டாமல் இருப்பது ஏன்னு புரியல. வருமான வரி குறித்து: நம்மாளுங்க கிட்ட ரெண்டு பிரச்சனை.

1. ஆப்சன் என்பதே நமக்கு ஆகாது, நல்லதோ கெட்டதோ இதாண்டா ஒனக்குன்ன்னு கொடுத்துட்டா, ரெண்டு நாள் பொலம்பிட்டு அப்புறம் அதை ஏத்துக்கிட்டுப் போயிடுவாங்க

2. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டின் போதும் வருமான வரியை குறைக்குணும் என்கிற எதிர்பார்ப்பு சராசரி இந்தியனைப் போல வருமானவரிக்குறைப்பை நான் விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு குறைவு என்பது தெரிந்ததே.

80சி யை வைத்து ரெண்டு ஆப்சன்கள் கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. அதிலும் எல் ஐ சி யை பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்ய எண்ணியிருக்கும் போது 80 சி மூலம் வருமான வரியை குறைப்பது ஆப்சனலா மாத்துவாங்கன்னு நினைக்கவேயில்லை.

இனி, செக்சன் 80 சியில் 1.5 லட்சம் சேமிப்பு / முதலீடு இல்லாதோர், வீட்டுக்கடன் இல்லாதோருக்கு புதிய திட்டம் பயனளிக்கும். இவை இருப்போர் பழைய திட்டத்திலேயே இருத்தல் நலம்.இன்னும் சில ஆண்டுகளில் பழைய திட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கிறேன், அப்போது புதிய திட்டத்தில் இன்னும் மாற்றம் வரும், இன்னும் எளிமையாகும், வரி குறையும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

இப்போதைக்கு அரசு யாரையும் புதுத் திட்டத்தில் வருமானவரி தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தவில்லை, உங்களுக்கு பழைய திட்டம் பயனளிக்கும்னா நீங்க அதுலயே இருந்துக்கலாம். இத்தனை வருமானம் இருந்தால் பழசு, இத்தனை இருந்தால் புதுசுன்னு பலர் எழுதிக்கிட்டு இருக்கின்றனர்.

சிம்பிளா நண்பர் Thirumalai Kandasami HRA + LTA + 80 C + 80 D + வீட்டு கடனுக்கான வட்டி + NPS 50,000 எல்லாவற்றையும் சேர்த்து மூன்று லட்சத்திற்க்கும் மேலிருந்தால் புதிய திட்டத்தால் எப்பயனுமில்லை. பழைய முறையிலேயே தொடரலாம் என்கிறார் – மிக எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியது இது இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தில் 80 சி 1.5 லட்சம் இருந்தால் வருமானத்துக்கு பழைய முறையில் எவ்வளவு வரி, புதிய முறையில் எவ்வளவு வரின்னு தெளிவா போட்டிருக்கு.

இதை வைத்தும் முடிவு செய்யலாம்

நண்பர் Vijayaraghavan Ramamoorthy ஒரு தளத்தையே உருவாக்கி விட்டார், இதில் உங்க வருமானத்தையும் deductions ஐயும் உள்ளிட்டால் வருமானவரி கணக்கிட்டுச் சொல்வதோடு பழைய முறையா புதிதா எது பயனளிக்கும் என்றும் சொல்லி விடுகிறது. உங்களுக்கானதை நீங்க எளிதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்காவில் சென்ற ஆண்டு இதே போல ஒரு முறையில் வருமான வரி குறைக்கப்பட்டது. இங்கு itemized deductions, standard deduction என இரு வகைகளில் வருமான வரி தாக்கல் செய்யலாம். பெரும்பாலும் வீட்டுக் கடன் உள்ளோர் itemized deductions முறையிலும் இல்லாதோர் standard deduction முறையும் நாடுவர், ட்ரம்ப் சென்ற ஆண்டு standard deduction ஐ அதிகப் படுத்தி மாற்றம் கொண்டு வந்தார். அதற்கு முன் itemized deductions செய்து வந்த நான் இப்போது standard deduction க்கு மாறிவிட்டேன். இதில் என் வருமான வரி குறைவு. அதே போல இந்தியாவின் எனக்கு வருமானம் இருக்கு ஆனால் விலக்கு தரும் சேமிப்பு இல்லை – இனி இந்தியாவிலும் புதிய முறையில் வருமான வரி தாக்கல் செய்வேன்.

ஆம், இந்தாண்டு அனைவருக்கும் வருமானவரி குறையவில்லை, ஆனால் புதிய வரிவிதிப்பின் மூலம் குறிப்பிட்ட சதவீதம் பேர் பயனடைவார்கள். இந்தியாவிலும் வருமான வரி தட்டையான சிந்தனையில் அடிப்படையில் இல்லாமல் ஒரு குடும்பத்தின் disposable income அடிப்படையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வருமானம் ஈட்டாத மனைவி, இரு குழந்தைகள் உடைய குடும்பத்தலைவரும், திருமணம் ஆகாத ஒருவரும் ஒரே மாதிரி வருமான வரி செலுத்துவது சரியில்லை. திருமணம் ஆனவர்கள் இணைந்து வருமானவரி செலுத்தவும், அவர்களுக்கு இருக்கும் Dependants களைப் பொருத்தும் வருமான வரி அமைய வேண்டும்.

Dependants வரையறை செய்வது முன்பு கடினமாக இருந்திருக்கலாம், ஆதார் எண் கொண்டு வந்தப்புறம் அதைச் செய்வது எளிது. ஆதார் எண்ணுக்கு வருமானம் இருக்கா இல்லையா, இந்த ஆதார் எண் கொண்ட கணவன் / மனைவி, குழந்தைகளை ஒருவர் மட்டுமே Dependant ஆக காட்ட முடியும் – இதை எளிதில் நடைமுறைப் படுத்த முடியும். அதுவரை இருப்பதில் சிறந்த ஆப்சனை உபயோகிப்போம்

(Visited 72 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close