இந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 3
விசாரணையில் முதலில் ஒத்துழைக்காமல் தன்னைக் கொன்றுவிடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தான். காஃபிர்களிடம் சிறைப்பட்டுக் கிடப்பது பற்றி வருத்தப்பட்டான். இதற்குள் அவனைக் கொல்ல மும்பை போலீசில் ஒரு சாரார் ஆத்திரத்தில் முன்வந்தனர். ஐஎஸ்ஐ அவனைக் கொல்லத் துடியாய்த் துடித்தது.
சில நாட்களில் ராகேஷ் மரியாவிடம் பேச ஆரம்பித்தான் கசாப். இந்துஸ்தானம் பற்றி அவனுக்குச் உருவேற்றப்பட்ட கதைகளைச் சொன்னான். தினமும் 5 வேளை ஆஜான் ஓதப்படுவது போல கனவு வருகிறது என்றான். ரமேஷ் மஹாலே என்ற அதிகாரி கசாப்பை ஒரு வண்டியில் ஏற்றி அருகில் உள்ள மசூதிக்குச் சென்று காட்டினார்.
இந்துஸ்தானத்தில் முஸ்லிம்கள் தொழுகையே செய்ய முடியாது, மசூதிகளை அரசு பூட்டி வைத்துக்கொள்ளும் என்று கதை கேட்டிருந்த கசாப் ஆச்சரியப்பட்டான்.
இந்துஸ்தானத்தில் முஸ்லிம்கள் இப்படி வாழ முடியும் என்பதே அவனுக்கு புதிய தகவலாக இருந்தது.
அதன் பிறகு அவனும் நண்பனும் வழிப்பறிக்கு ஆயுதம் பழக லஷ்கரில் சேர்ந்த கதையில் இருந்து சொல்ல ஆரம்பித்தான். கேட்கக் கேட்கத் திகைத்தார் ராகேஷ் மரியா.
அவனது வலது கையில் இந்துக்கள் கட்டிக் கொள்வது போல காவியும் சிகப்புமாக கயிறுகள் கட்டப்பட்டன. அவனுக்கும் கூட்டாளிகளுக்கும் ஐதராபாத் அருணோதயா கல்லூரியின் போலி அடையாள அட்டைகள் தரப்பட்டன. ஆனால் கசாப்புக்கு அது கிடைக்கும் முன்னரே ‘வேலை’ தொடங்கிவிட்டார்கள்.
திட்டப்படி செபடம்பர் 27 அன்று தான் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு எல்லாம் நடத்துவதாக ஏற்பாடு. அன்று ரம்ஜான் 27ஆவது நாள் என்பதால் அப்படி ஏற்பாடாம். ஆனால் ஏனோ ஒரு நாள் முன்பே நடத்திவிட்டார்கள்.
கசாப்புக்கு ‘சமீர் தினேஷ் சௌத்ரி’ என்ற பெயரும் பெங்களூர் மாணவன் என்ற கதையும் ஜோடிக்கப்பட்டு, அந்தக் கதைக்குத் தோதாக பெங்களூரில் ஒரு குடும்பமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவன் இறந்தவுடன் ஊடகங்கள் பெங்களூர் போய் அழும் பெற்றோரைப் பேட்டி கண்டு போட்டு அவன் வங்காளி இந்து என்று நிறுவத் திட்டமிட்டிருந்தார்கள்.
இதன் மூலம் மும்பை பயங்கரவாதம் இந்துக்களால் நடத்தப்பட்டது என்று நிறுவி இந்து பயங்கரவாதம் என்ற தங்கள் கற்பனைக்கு உயிரூட்ட திட்டமிட்டிருந்தார்கள் காங்கிரசும் பாகிஸ்தானின் உளவுத்துறை ஐஎஸ்ஐயும். ஆனால் கசாப் உயிரோடு மாட்டிக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள ஃபரிட்கோட்காரன், பெயர் அஜ்மல் அமீர் கசாப் என்று உண்மை வெளிவந்தது.
கடவுள் உண்மையின் பக்கம் மட்டுமே நிற்பார்.
வந்தே மாதரம்!!!
சில விவரங்கள்:
26/11/08: கசாப் கையில் காவி, சிவப்பு கயிறுகளுடன் இந்து அடையாளம் தெரிய பிடிபடுகிறான்
.
17/12/08: அப்துல் ரகுமான் அந்துலே என்ற காங்கிரஸ்காரர் 26/11 தாக்குதல் இந்துக்களால் நடத்தப்பட்டது என்று பாராளுமன்றத்தில் பேசினார்.
20/07/09 – ராகுல் காந்தி இஸலாமிய பயங்கரவாதத்தை விட இந்துத் தீவிரவாதம் ஆபத்தானது என்று அமெரிக்கத் தூதரிடம் சொன்னார்.
28/12/2010 – திக்விஜய் சிங் 26/11 RSS kisazish என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இதற்கு முன் ஹேமந்த் கர்கரே மாலேகாவ் சம்ஜௌதா குண்டு வெடிப்புகளில் லெஃப் கர்னல் புரோஹித், சாத்வி ப்ரக்யா ஆகியோரைக் குற்றம்சாட்டி கைது செய்தார். இருவரையும் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தது.
இந்து தீவிரவாதம் பற்றி எழுதிய கோப்பில் கையெழுத்துப் போடச்சொல்லி உள்துறையில் செயலர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி ஆர்விஎஸ் மணி மிரடப்பட்டார்.
இவற்றையும் மீறி இந்த மண்ணின் தொன்மையான அறம் தழைக்கிறது. பாரதத் தாயைப் பணிவோம். அறம் காக்க இயன்றதைச் செய்வோம்.