செய்திகள்தமிழ்நாடு

உயர்தர இலவசக் கல்வி – (விடுதி வசதியுடன்)

உயர்தர இலவசக் கல்வி மாணவர்_சேர்க்கை (விடுதி வசதியுடன்)

4 முதல் 9 வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் சைவ குடும்பத்தினர் ஆண் பிள்ளைகளுக்கு உயர்தர இலவச ஹாஸ்டல் வசதியுடன் கல்லூரி படிப்பு வரை இலவசமாக படிக்க மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

பள்ளிக் கல்வியுடன் பண்பாட்டு பயிற்சி, தேவார திருவாசக பயிற்சி,சைவ ஆகம பயிற்சி, நவீன கம்ப்யூட்டர் பயிற்சி, உலகளாவிய வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் விதமாக ஆங்கில புலமை பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இந்த அரிய வாய்ப்பை ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக வழங்க தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ 27-வது குருமகா சந்நிதானம் அனுக்கிரகம் செய்துள்ளார்கள்.🙏

கொரானாவால் முடங்கிப் போயிருக்கும் சைவப் பெருமக்கள் குடும்பத்தினர் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி ,நமது பிள்ளைகள் வாழ்க்கை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வழிவகை செய்வோம்.

இச்செய்தியை உலகெங்கும் உள்ள சைவ குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்து உதவிட சைவ குல அமைப்புகளையும், சைவ சமூக ஆர்வலர்களையும், சிவாச்சாரியார் பெருமக்களையும், ஓதுவார் தேசிகர் பெருமக்களையும், அன்புடன் வேண்டுகிறோம்.

ஓம் நமசிவாய!
குருபாதம் போற்றி!

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கு.

சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்வோம்!

மேலும் தொடர்புக்கு:
கண்காணிப்பாளர்,
தருமையாதீனம் திருமடம்,
தருமபுரம், மயிலாடுதுறை-609001
தமிழ்நாடு.*

(Visited 36 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close