ஐக்கிய அரபு எமிரேட் அணியிடம் தோற்ற இந்திய அணி
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்திய அணி உத்வேகத்துடன் ஐக்கிய அரபு எமிரேட் அணியுடன் மோதினாலும் இறுதியில் 2-0 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஆட்டம் துவங்கி முதல் முப்பது நிமிடங்கள் களத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி இரண்டு வாய்ப்புக்குகளை நழுவ விட்டார்.முதல் பாதி முடியும் நேரத்தில் முபாரக் அடித்த கோலினால் எமிரேட் அணி முன்னிலைப் பெற்றது. பல முறைப் போராடினாலும் அதன் பின் இந்திய அணியால் எந்த கோலும் அடிக்க இயலவில்லை.ஆட்டம் முடியும் நேரத்தில் அலி அஹமத் மற்றொரு கோலை அடிக்க இறுதியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வீழ்ந்தது.
இப்பொழுது இரண்டாவது இடத்தில் இருந்தாலும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இன்னும் நழுவதில்லை. அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெறலாம்.