திருவனந்தபுரம்:நேற்று உச்ச நீதி மன்றத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் என்று 51 பேர் கொண்ட பட்டியலை வழங்கியது கேரள கம்யுனிஷ அரசு.பெயர்ப் பட்டியலை எடுத்துக் கொண்ட ஊடகங்கள் அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களையும், வீட்டு முகவரியையும் வைத்து, பெயர்ப்பட்டியலில் உள்ளது அந்த நபர்தானா என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கேரள கம்யுனிஷ பினராயின் அரசு , உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பைத்தான் நிறைவேற்றுகிறோம் என்று காண்பித்துக் கொண்டு, இந்து மத நம்பிக்கைகளை எப்படியாவது சிதைத்துவிட்டோம் என்று காண்பிக்க முனைகிறது.
10-50 வயதுக்கு உட்பட்டோர் என்று கொடுத்த வரிசையில், சிலர் 50 வயதுக்கும் மேற்பட்டோர். பரஞ்சோதி வயது 47என்று குறிப்பிடப்பட்ட நபர் பெயர்ப்பட்டியலில் 21 வது இடத்தில் உள்ளது. அவரை அணுகி ஒரு தொலைக்காட்சி விசாரித்த போது, நான் பெண்ணல்ல, ஆண் , நான் 16 பேர் கொண்ட குழுவோடு என்றேன் என்றுள்ளார்.
இதேபோல் கெளரி ஆறுமுகம் வயது 49 என்ற நபரும் 22 பேர் கொண்ட குழுவோடு என்றேன் என்றார். இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். எனக்கு தொலைபேசி அழைப்புக்கு மேல், தொலைபேசி அழைப்புகள். எங்கள் குழுவில் நான்கு பெண்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் 50 வயதுக்கு மேலானாவர்கள் என்றார்.
இன்னும் பலர் தங்களது தொலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிட்டனர்.அந்த லிஸ்டில் உள்ள வசந்தையா வயது 59, ரமாதேவி 54 ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இதைப்பற்றி தேவஸ்வம் போர்ட் அமைச்சரிடம் கருத்துக் கேட்ட போது, 7564 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய்யப்பட்டன. இதில் 10-50 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வந்த லிஸ்ட் படிதான் அவர்கள் பெயர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்கள் கோயிலுக்குள்; சென்றார்களா என்பது போன்ற லிஸ்ட் எங்களிடம் இல்லை என்றார். ஆனால் நீதிமன்றத்தில் 51 பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரிசனம் செய்தவர்கள் என்று நீதிமன்றத்தில் கொடுத்தது கம்யுனிஷ கேரள அரசு.
அரசிடம் இத்தவறுகளை சுட்டிக்காட்டிக் கேட்ட போது , அது ஒருவேளை பதிவு செய்யும் அதகாரிகள் செய்த தவறாக இருக்கும், நாங்கள் அந்த லிஸ்ட் படி பெண்கள் என்றதால் சமர்பித்தோம் என்று தற்போது விளக்கமளிக்கிறது. பலரும் இதைப் பற்றி கருத்து சொல்லும் போது, அரசு சரிபார்த்தல்லவா நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இது திட்டமிட்டே பல பெண்களை உள்ளே கொண்டு சென்றேன் என்று காட்டவும், இந்து பாரம்பரியத்தை உடைத்து விட்டோம் என்பதற்காகவும் மட்டுமே பெரும்பாலான பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.