மதுரை: மதுரை நேரு நகரைச் சேர்ந்தவர் சசிகலா. இவரது கணவரின் பெயர் பரமேஸ்வரன். பரமேஸ்வரனுக்கும் விரட்டிபாது பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை பலமுறை சசிகலா கண்டித்துள்ளார். இதனால் வீட்டிற்கு வருவதையே நிறுத்தியுள்ளார் பரமேஸ்வரன்.
ஒருமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையும் அவரை அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் மீண்டும் கள்ளத்தொடர்பை நீடித்துள்ளார். இந்நிலையில் கணவனிடம் அன்பாக பேசி வீட்டுக்கு வரவழைத்துள்ளார் சசிகலா. இரவு தூங்கும் போது கொதிக்கும் எண்ணெயை கணவனின் பிறப்புறுப்பில் ஊற்றியுள்ளார். இதனால் சசிகலாவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
(Visited 88 times, 1 visits today)
+1