நடிகா் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று காலை 9 – 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் திருமணம் நடக்கிறது. இதனைத் தொடா்ந்து இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நடிகா் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குநருமான சௌந்தா்யாவுக்கும், தொழிலதிபா் விஷாகனுக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இன்று திருமணம் நடைபெறும் நிலையில் கடந்த 8ம் தேதி முதலே திருமணத்திற்கான சம்பிரதாயங்கள் விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
நேற்று காலை போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் அவரது நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொண்டனா்.
தமிழக முதல்வா் பழனிசாமி, எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், திருநாவுக்கரரசர், திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கும், நெருங்கிய சொந்தங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.