புதுடில்லி: புதுடில்லியில் உள்ள காரல் பாக்கில் உள்ள ஆர்பிட் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து இன்று அதிகாலை நடந்துள்ளது என்று ஏ என் ஐ செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. 20 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏன் எரிந்தது போன்ற மேலதிகக் காரணங்கள் இன்னும் வரவில்லை. மேலும் இதுவரை 34பேரை தீயணைப்பு வீரர்கள் ஹோட்டலிலிருந்து வெளியே பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)
0