அமராவதி: தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளாவின் நீர்ப் பிரச்சினையை தீர்க்க கோதாவரி , காவேரி நதிகளின் நதி இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அமைச்சரவை கூடி விரைவில் முடிவெடுக்கும். இதை எப்படி இணைப்பது என்பதற்கான திட்ட வரைவு வரை தயாராகி விட்டது என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்த இரு ஆறுகளையும் இணைக்க 60,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகையால் உலக வங்கியிடமோ, ஆசிய டெவெலப்மென்ட் வங்கியிடமோ வாங்கி இத்திட்டம் நிறைவேற்றப்படும். ஏனெனில் கோதாவரி நதியில் 1100 குயுபிக் செண்டி மீட்டர் கொள்ளளவு நீரானது கடலில் வீணாகிறது. இதை காவேரியுடன் இணைத்தால் தமிழகத்தின் தென்கோடி வரை பலன் பெற இயலும். மேலும் இது தமிழ்நாடு கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே உள்ள தீராப்பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்கும். எனவே தான் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.
இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு அமெரிக்காவிலுள்ள ஆந்திர பொறியாளர் கொடுத்துள்ள திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. கால்வாய்களாக வெட்டுவதற்குப் பதிலாக மெல்லிய பைப்புகளை அமைத்துக் கொண்டு சென்றால் நீர் இழப்பும் ஏற்படாது. மேலும் செலவும், வேலையைச் செய்து முடிக்கக் கூடிய காலமும் குறையும் என்பதால் அந்த முடிவையே எடுத்துள்ளோம். இதன் மூலம் நூறாண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் தமிழ்நாடு கர்நாடகா பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும் .இவ்வாறு அவர் பேசினார்.