சபரிமலைக்கு திருட்டுத்தனமாக கேரள அரசால் அழைத்துச் செல்லப்பட இரு பெண்களில் ஒருவரான கனகதுர்காவை, குடும்பத்தில் சேர்க்க வேண்டுமானால் அவர் பக்தர்களிடமும், மக்களிடமும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரையில் அவரை குடும்பத்தில் சேர்க்க இயலாது என திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் அரசு நடத்தும் தங்கும் விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பாக கனகதுர்காவுக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட சண்டையில் கனகதுர்கா தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே நாளில் அவரது மாமியாரும் அடிபட்டதால் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
குடும்பத்தினரைச் சுமூகமாக சேரச் சொல்லி காவல்துறை எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து அவரை அரசு தங்கும் விடுதியில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
கனகதுர்காவின் அண்ணன் திருவனந்தபுரத்தில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிய கூட்டத்தில், தமது தங்கையின் செயலுக்காக பொதுமன்னிப்பு கேட்டார். பக்தர்களிடம் தனது தங்கை கேட்டால் ஒழிய அவரை எக்காரணம் கொண்டும் குடும்பத்தில் சேர்க்கப் போவதில்லை என்று அறிவித்தார். இவ்வாறாக ஒட்டு மொத்த குடும்பமும் கனகதுர்காவின் செயலால் தங்களுக்கும் கெட்ட எப்யர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள். மேலும் பக்தர்களிடம் பொது மன்னிப்பு கேட்பது ஒன்றே கனகதுர்காவிற்கு நல்லது என்றனர்.