சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவர்களுடன் தனது 75 வது பிறந்த நாளை இசைஞானி இளையாராஜா கொண்டாடினார். பின்னர் பாடல்கள் பாடி உரையாடினார்.
உடுமலைபேட்டை பக்கதில் காடுகள் நிறைந்த ஒரு கிராமத்தில் தியேட்டர் ஒன்று இருந்தது. அதில் ஒரு சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் காடுகளில் இருந்து யானைகள் கூட்டமாக வந்து அந்த திரைப்படத்தில் ஒலிப்பரப்பாகும் ஒரு குறிபிட்ட பாடல் ஒன்றை கேட்டுவிட்டு அமைதியாக சென்று விடுவது வழக்கம். 1986ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த பாடல்தான் “ராசாத்தி உன்ன கானாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது” என்று கூறி மாணவர்களக்கு அந்த பாடலை பாடி அசத்தினார்.
திருமணமான தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினர் ஜெர்மனியில் இருக்கிறார்கள். மனைவி கர்பமாக இருக்கிறார், அவருக்கு மருத்துவ சோதனை செய்ய சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். அவரை சோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எந்த அசைவும் இல்லை அதனால் நீங்கள் உடனடியாக மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என்று கூறிவிடுகிறார்கள்.
அந்த பெண் மருத்துவரிடம் எனக்கு திருவாசம் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார். இரண்டு நாள் அவர் திருவாசகம் கேட்ட பிறகு குழந்தைக்கு அசைவு ஏற்பட்டது. குழந்தை சுகபிரவமாக பிறந்தது. இதுதான் இசையின் மகத்துவம். என இன்னும் பல நினைவுகளை மாணவர்களோடு அவர் பகிர்ந்து கொண்டார்.