திருவாரூர் : இன்று (பிப்ரவரி 2) அதிமுகவின் தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
வருமான வரி விலக்கு 5 லட்சம் வரைதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ரூ.8 லட்சம் என்பதை அளவுகோலாக தெரிவித்தனர். ஆனால், இப்போது ஏன் ரூ.8 லட்சம் வரை வரிவிலக்கு அறிவிக்கவில்லை?
விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வருமானம் என்பது போதாது. அதனை 12,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கலாம்.
சிலவற்றை வரவேற்றாலும், எல்லாவற்றையும் வரவேற்க முடியாது.
தமிழகத்திற்கு இந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியால் பெரிய அளவில் நன்மை இல்லை. , பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் போல் உள்ளது இந்த பட்ஜெட். ஆளுங்கட்சி செய்யக்கூடியது தான், அதனால், நான் அதை குறைசொல்ல விரும்பவில்லை”.
இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் பட்ஜெட்டை வரவேற்றுப் பாராட்டு தெரிவித்து உள்ளனர். தம்பிதுரை கடந்த சில நாட்களாக பாஜகவுடனான கூட்டணிக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் பேசி வருகிறார் என்று அதிமுகவினரே தெரிவிக்கின்றனர்.