நாடெங்கிலும் ஏழு புதிய ஐஐடிகள் ஏழு ஐஐஎம்கள், பதினான்கு தகவல் தொழில்நுட்ப சிறப்பு கல்வி நிறுவனங்கள் தொடங்க இருப்பதாக குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
இதோடு கிழக்கு சம்பிரான் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம், 103 கேந்திரிய வித்யாலயா, 62 நவோதயா பள்ளிகள் மற்றும் பழங்குடி மக்கள் அதிகமுள்ள இடங்களில் ஏகலைவா மாதிரி பள்ளிகளும் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதோடு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக நாடெங்கும் 5000 பள்ளிகளில் அடல் சோதனை ஆய்வகங்களும் தொடங்க இருப்பதாக அவர் கூறினார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க ரூபாய் ஐயாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
(Visited 22 times, 1 visits today)
+1