செய்திகள்தமிழ்நாடுபொருளாதாரம்
பாண்டியன் , பல்லவன் வங்கிகள் இணைப்பு
தமிழ்நாட்டில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் பல்லவன் , பாண்டியன் கிராம வங்கிகள் இணைக்கப்படுகின்றன.
இவ்வங்கிகள் இனி தமிழ்நாடு கிராம வங்கி என்று ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து செயல்படத் தொடங்கும்.
இரு கிராம வங்கிகள் இணைக்கப்படுவதன் மூலம் உருவாகும் தமிழ் நாடு கிராம வங்கி ஏறக்குறைய 2100 கோடி வர்த்தகம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இயங்கும் இந்த வங்கிகள் 625 கிளைகளைக் கொண்டது.
இணைக்கப்பட்டு இனி ஒரே பெயரில் இயங்கியது போகும் தமிழ் நாடு கிராம வங்கி ,இந்தியன் வங்கியின் கீழ் சேலம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்.
(Visited 36 times, 1 visits today)