புதுடெல்லி: புதன்கிழமை (06-02-2019) அன்று, பசுப் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் தனி ஆணைக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “ராஷ்டிரிய காமதேனு ஆயோக்” என்ற பெயரில் விரிவாக்கப்படும் ஆணைக் குழு பசுவைப் பேணிக்காக்கவும், பசுவை பாதுகாக்கவும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் திட்டங்களை வகுக்கும் என்று தெரிவித்துள்ளது.
பசுப் பாதுகாப்பு பற்றி இடைக்கால பட்ஜெட்டில் ( 2019-2020 ) தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது கால்நடைகள் அமைப்பு, விலங்கு அறிவியல், வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய/மாநில அரசின் விலங்குகள் நலப்பிரிவுத் துறை மூலம் பசுக்கள் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியை பெருக்க இந்த துறைகளுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
(Visited 29 times, 1 visits today)
0