புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை இன்று உச்ச நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசு மேல் முறையீட்டை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.
இது தொடர்பான தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது.” தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலையை தற்போதைக்குத் திறக்க அனுமதிக்க இயலாது . மேலும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆலை திறக்கப்படலாம் என்ற உத்தரவையும் ரத்து செய்து உத்தவிட்டு உள்ளது. மேலும் ஆலை திறக்கக் கோரும் வழக்கை , சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா குழுமம் கோரலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. வேதாந்தா கூறுகையில், தங்களுடைய தரப்பை தமிழக அரசு முழுமையாகக் கேட்கவில்லை என்று ஆலை நிர்வாகம் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.