புதுடெல்லி: புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் 44 வீரர்கள் தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈத்தனர். இத்தாக்குதல் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க தேசிய ஆலோசகர் அஜித் தோவல், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங்,சுஷ்மா சிவராஜ் ஆகியோர் பிரதமர் இல்லம் நோக்கி விரைந்துள்ளனர். இன்னும் சில மணித்துளிகளில் இதுகுறித்து மீண்டும் விவாதிக்கப்பட உள்ளது. கேபினட் கூட்டமும் கூட்டப்பட உள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் தான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார் மோடி. இந்தியா இதற்கு தகுந்த பதிலடியைக் கொடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பும் உள்ளது. இந்திய தேசமே இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்துவருகிறது. ஆனால் இந்த சூழ்நிலையிலும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், அரசியல்வாதிகளும் இத் குறித்து கவலை தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. கீழ்த்தரமாக முக நூல் பதிவுகள், ட்விட்டர் பதிவுகளில் மகிழ்ச்சி அடைவதற்கான குறியை டிக் பண்ணி தங்களைத் தாங்களே தேசத் துரோகிகளாகக் காண்பிக்க முனைந்துள்ளனர். இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.