சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை தொடர்பாக முதல்வர் பழனிசாமியை விசாரிக்க நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என மனு கொடுத்தார்.
இதன் ன்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின்ஓய்வு தளமாக இருந்து வந்தது கோட நாடு. அங்கு அரசு கோப்புகள் பல இருந்தன. கோடநாடு கொலை சம்பவத்தில் பழனிசாமி குற்றவாளி என்று சொல்லப்படுகிறது. குற்றம் சுமத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெயலலிதாவின் டிரைவராக பணியாற்றிய கனகராஜின் மரணத்தை விபத்துதான் என எஸ்பியை தெரிவிக்க வைக்க முதல்வர்தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பழனிசாமியால் தமிழகத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.
ஒழுங்கான முறையில் விசாரணை நடக்க வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமியை இந்த பொறுப்பில் இருந்து நீக்கி வைக்க வேண்டும். இதனை ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும். இதைத் தான் கவர்னரிடம் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளேன். என்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் உறுதி அளித்துள்ளார். கோட நாட்டு சம்பவத்தின் பின்புலத்தில் எடப்பாடி பழனிசாமியே உள்ளார்.
கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியைச் சந்திப்போம். மேலும் நீதிமன்றத்தையும் அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.