சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் குழ. சண்முகநாதன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைச் சந்தித்த குழ. சண்முகநாதன், பின்னர் எடப்பாடி தலைமையில் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, ” எடப்பாடி கட்சியை சமுதாயக் கூடம் (தேவர்) போல நடத்துகிறார். தனக்கு கீழுள்ள ஒன்றிய செயலாளர் பதவியை தம்மிடம் கேட்காமலே நிரப்பப்பட்டது. மேலும் அமமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பதால் , தாம் தாய்க்கழகத்திற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
(Visited 41 times, 1 visits today)