பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
தவறான சிந்தனை உடையவனை ஆலோசனை வழங்கும் மந்திரியாக வைத்திருப்பது, சற்றேறக்குறைய எழுபது கோடி பகைவர்களை உடன் வைத்திருப்பதற்கு ஒப்பதாகும். தவறான சிந்தனையின் தாக்கத்தை இதைவிட எளிமையாக யாராலும் இருவரி எழுசீரில் சொல்ல முடியாது.
இது ஏதோ செய்தியல்ல; வாசித்துக் கடப்பதற்கு! வாழ்வின் வெற்றிக்கான அடிப்படை அறிவு நூல்! இதை, அவ்வப்பொழுது, எண்ணத்தில் நிறுத்துங்கள்! எச்சரிக்கை பிறக்கும்! வாழ்வே இனிமையாகும்!! உலகத்தைத் திருத்துவது நமது நோக்கமல்ல; ஆனால், நாம் திருந்தினால், இந்த உலகம் ஒருநாள் ஒட்டுமொத்த நற்பலனை அடையும்! நம்புங்கள்!!
(Visited 19 times, 1 visits today)