தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் , தூத்துக்குடி எம்.எல்.ஏவும் , முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் , சைவ வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்ரிடம் பேசிய ஆடியோ டேப் விவகாரம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.
அதில் அவர் தேவேந்திர குல வேளாளர்கள் , அவர்களை வேளாளர் சமூகமாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தமிழக அரசு இதைப் பரிசீலிக்க நான்கு உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை நியமனம் செய்துள்ளதை எதிர்த்து , நீங்கள் பெட்டிஷன் தாக்கல் செய்யுங்கள் என்று தூண்டி விடும் விதமாக பேசியுள்ளார் என்பதே கீதா ஜீவன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.
ஆகையால் உங்கள் சமுதாயம் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசுவதாக ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேவேந்திர குல சமூகத்தின் உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தார், பள்ளர், கடயர், பன்னடி, களடி ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வைத்த கோரிக்கையைத் தான் , திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவன் , வெள்ளாளர் பட்டியலில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் இதனால் இரு சமூகத்தினரிடையே கலவரத்தையும் விஷத்தையும் தூண்டும் விதமாக செயல்படுகிறார் என்றும் புதிய தமிழகம் , இதனைக் கண்டித்து போஸ்டர் அடித்து எச்சரிக்கை செய்துள்ளது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஓட்டுக்கள் புதிய தமிழகம் கட்சி அதிமுக அணியில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக மாறும் என்பதால்தான் இத்தகைய தூண்டுதல் முயற்சி நடந்துள்ளதாக திமுகவினரே குற்றம் சாட்டுகின்றனர். கீதா ஜீவன் இதை வன்மையாக மறுத்தாலும், திமுகவின் நிர்வாகி மனோகர் ராஜ் என்பவர் கீதா ஜீவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி எஸ்பி முரளி ரம்பாவிடம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும் பல தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த திமுக நிர்வாகிகளே , திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இதனால் கனிமொழி மிகுந்த எரிச்சலில் உள்ளதாகவும், அச்சத்தில் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
அந்த வீடியோ பேச்சை வெளியிடலாமே.