சென்னை: வரும் ஜனவரி 18ஆம் தேதிக்குள்,தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பெயரிலும் வாட்ஸ்ஆப் குழு தொடங்க டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
எப்.ஐ.ஆர் பதிவை ஏற்கனவே தமிழகக் காவல்துறைஆன்லைனில் ஆரம்பித்திருக்கிறது. இதனால், குற்றவாளிகள் குறித்தத் தகவல்களையும் ஒரே டேட்டா பேஸில் சேகரித்து ஒருங்கிணைக்க முடிகிறது. காவல்துறை சான்றிதழ் பெறுவது, நற்சான்றிதழ் பெறுவது உள்ளிட்டவை டிஜிட்டல் முறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில் சில காவல் நிலையங்கள் வாட்ஸ் அப் குழுக்களைத் தொடங்கி அதன் மூலம் புகார்களைப் பெற்றுவந்தன. இதனை அனைத்துக் காவல் நிலையங்களிலும் செயல்படுத்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
(Visited 25 times, 1 visits today)
0