சென்னை: ஐபிபிஎஸ் கிளெர்க் பிரிவிற்கான தேர்வும் (Institute of Banking Personnel selection) , கரூர் லட்சுமி விலாஸ் வங்கியும் தனித்தனியே ஊழியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்றது. இத்தேர்வு ஜனவரி 20 அன்று நடைபெற உள்ளது. இரண்டு வங்கி தேர்வுகளுக்கும் பல பட்டதாரி இளைஞர்கள், இளைஞிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
இப்போது இரண்டு வங்கிகளின் தேர்வும் ஒரே நாளில் நடக்கவிருப்பதால் விண்ணப்பம் செய்தவர்கள் தற்போது ஒரு தேர்வை மட்டுமே எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் ஐபிபிஎஸ் கிளெர்க் தேர்வு இந்தியா முழுமைக்கும் நடக்கவுள்ளது. எனவே அதை எக்காரணம் கொண்டும் மறுபரிசீலனை செய்யமாட்டார்கள். கரூர் லக்ஷ்மி வங்கி தேர்வை ரத்து செய்தால் மட்டுமே உண்டு. ஒருநாளைக்குள் என்ன மாற்றம் நிகழும் என்று தெரியவில்லை.
(Visited 24 times, 1 visits today)
+1